# டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் | கடற்பயணம்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு எனக் கூறியவர் ஒளவையார் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கூறியவர் கணியன் பூங்குன்றன் தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி முந்நீர் வழக்கம் எனத் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பழந்தமிழர் பொருளீட்டுதலைத் தம் கடமையாகக் கருதினர். இதனைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருள்வயிற் பிரிவு விளக்குகிறது. பொருள்வயிற் பிரிவு, காலில் (தரைவழிப்பிரிதல்) பிரிவு, கலத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு என இருவகைப்படும். ஏலமும் இலவங்கமும் இஞ்சியும் மிளகும் மேற்காசிய நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. தமிழ்நாட்டில், பிற நாட்டார் உள்ளத்தைக் கவர்ந்த பொருள்கள் முத்தும் பவளமும் ஆரமும் அகிலும் வெண்துகிலும் சங்கும் ஆகும்.