December 2011 Current Events in Tamil - II டிசம்பர் 2011 முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு -II
நார்வே நாட்டில் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பரிசை கூட்டாக பெற்ற (இடமிருந்து வலமாக) ஏமன் நாட்டு மனித உரிமை ஆர்வலர் தவாகல் கர்மன், லைபீரிய நாட்டு சமாதான ஆர்வலர் லேமா போவீ, லைபீரியா நாட்டு அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் ஆகியோர். (டிசம்பர் 10) ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவை ஆய்வு செய்த நிலைக்குழுவின் அறிக்கை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அக்குழு, லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கும் விஷயத்தைப் பாராளுமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிட்டது. நீதிபதிகள், எம்.பி.க்களை சேர்க்கவும் மறுத்துவிட்டது. (டிசம்பர் 9) சேவாக் உலக சாதனை இந்தூரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், 40 ஆண்டு கால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய உலக சாதனையை வீரேந்தர் சேவாக் படைத்தார்.